சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் Grok என்று ஒரு AI Assistant வெளியிட்டாங்க அதன் மூலம் பல்வேறு கேள்விகளையும் பல்வேறு தகவல்களையும் ட்விட்டர் உள்ளேயும் வெளியேயும் நம்மால பெற முடியும். இதுவும் கொஞ்ச நன்றாக வளர்ந்து வந்துட்டு இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் பல பதிவுகளை சரி பார்ப்பதற்கும் இதை பயன்படுத்திட்டு இருந்தோம். இதன் மூலம் ஒரு Fake News யாராவது ஒருத்தவங்க பதிவு செய்தால் அதன் ரிப்ளை Section நேரடியாக சென்று Grok Tag பண்ணி சரி செய்ய முடிந்தது.
அதோடு அது ஒரு சில Update தொடர்ந்து கொடுத்துட்டு இருந்தாங்க அதே போல ஒரு Update ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுத்தாங்க அதாவது இமேஜ் எடிட் Option அதன் மூலம் ஒருவருடைய புகைப்படத்தை நம்மள Grok மூலம் மாற்ற முடியும். உதாரணமாக நம்முடைய ஒரு புகைப்படம் இருக்கிறது என்றால் அதை Grok Tag பண்ணி நம்முடைய புகைப்படத்தை வேறு விதமாக மாற்ற சொன்னால் இன்னும் தெளிவாக சொன்னால் நம்முடைய உடையை வேறு விதமாக மாற்றுவது, Coat Suit போடுவது அது போல. அதையெல்லாம் நாம செய்து கொண்டு இருந்தோம். ஆனால் அது எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது.
இந்த வருடம் துவங்கியவுடன் ஒரு ட்ரெண்ட் துவங்கியது யாராவது இரு தலைவரின் புகைப்படத்தை பதிவு செய்து அதில் Grok Tag செய்து இதில் யார் சிறந்த தலைவர் அவரின் புகைப்படத்தை மட்டும் வைத்துவிட்டு மற்றவரின் புகைப்படத்தை நீக்குவது போன்ற பல சின்ன சின்ன அரசியல்வாதிகள் துவங்கி விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என்று சென்று கொண்டு இருந்தது. ஆனால் அது இப்போது மாறி பெண்களையும் சிறு குழந்தைகளையும் நோக்கிய ஆபாச தாக்குதல்களாக மாறி இருக்கிறது.
யாரோ ஒருவருடைய புகைப்படத்தை பதிவு செய்து அதை ஆபாசமாக மாற்றுவது போன்ற Promptகள் தொடர்ந்துட்டு வருது அதோட இது எல்லை மீறி சிறு குழந்தைகளின் புகைப்படங்களையும் சிறு குழந்தை நடிகர்களின் புகைப்படங்களையும் கொடுத்து அதை மாற்றுவது போல தொடர்ந்து பதிவகள் வந்து கொண்டே இருக்கிறது. இது போல Promptகளையும் Grok அனுமதிக்கிறது என்பது தான் ஆச்சரியமா இருப்பதாக பல்வேறு சைபர் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அதன் பிறகு இது நம்முடைய அரசாங்கத்தின் கவனித்திற்கு சென்று இது குறித்து நடவடிக்கை எடுக்க x ட்விட்டர் நிறுவனத்தை கேட்டு இருக்காங்க அதோட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்க.
இது போல நம்முடைய புகைப்படத்தை பயன்படுத்துவதை தடுக்க ட்விட்டர்ல Settings சென்று Privacy மற்றும் Safety என்ற பகுதிக்கு சென்று Grok & Third Party Collaborators என்று இருக்கும் அதில் உள்ள அனைத்து Sections Uncheck பண்ணுங்க. இதன் மூலம் நம்முடைய புகைப்படங்கள் இது போல பகிரப்படுவது தடுக்கப்படலாம்.






