Signal Messaging ஆப் கேள்விபட்டு இருப்பிங்க அல்லது ஒரு சில பேர் அதை பயன்படுத்திக்கொண்டும் இருப்பிங்க, நம்மளோட டேட்டா பாதுகாப்பா இருக்கனும் அப்டினு இதை பயன்படுத்திட்டு இருப்பிங்க அதேபோல அவங்க பாதுகாப்பாவும் வச்சு இருப்பாங்க ஆனால் ரொம்ப நாட்களாக இருந்த குறை என்ன அப்டினா ஒரு வேலை உங்களோட போன் தொலைந்து போனாலோ அல்லது எதாவது திரும்ப சரி செய்யவே முடியாத அளவுக்கு ஆனாலோ உங்களோட போன் ஒட சேர்ந்து உங்களோட ஆப் டேட்டாவும் போகிரும். இது ஒரு பெரிய பிரச்சனையா இருந்து வந்தது.

Image Credits : Signal
அதன் பிறகு இதை சரி செய்து Backup Option கொண்டு வந்தாங்க கடந்த செப்டம்பர் மாதம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு அதன் பிறகு இப்போது ios Devicesக்கு கொண்டு வந்து இருக்காங்க. இதுல நமக்கு இரண்டு விதமாக நாம Backup எடுத்து கொள்ளலாம் முதலாவது Free Version இதன் மூலம் 100 MB உண்டான டேட்டா 45 நாட்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு Paid Version நீங்க மாதம் மாதம் 2 டாலர் கொடுக்கவேண்டி வரும் அதுல நீங்க 100 GB வரையும் Backup எடுத்துக்கொள்ளலாம்.
இதை எப்படி நீங்க செய்யணும் அப்டினா மொதல்ல உங்களோட Settingsக்கு போயிடு Settings → Backups → Setup → Enable Backups இதை மட்டும் செஞ்சீங்க அப்டினா போதும் உங்க டேட்டா Backup எடுக்கலாம். அதோட நீங்க டேட்டா Backup Enable பண்ணும்போதே நீங்க Free அல்லது Paid Version தேர்வு செய்து கொள்ளணும்.
உங்களோட டேட்டா எல்லாம் பாதுகாப்பை இருக்கனும் அப்டினா சிக்னல் ஆப் பயன்படுத்தலாம்.





