நாம WhatsApp பயன்படுத்தும் போது ஒருவருடைய நம்பருக்கு மெசேஜ் அனுப்பனும் ஆனால் அந்த நம்பரை நம்மளோட போன்ல Save பண்ண கூடாது அப்படி என்றால் என்ன செய்வோம். அந்த குறிப்பிட்ட நம்பரை நம்முடைய நண்பர்கள் அல்லது நமக்கே ஒரு சுய மெசேஜ் செய்து அதிக கிளிக் செய்தால் போதும் நேரடியாக அவர்களுடைய வாட்ஸப் மெசேஜ் பக்கத்திற்கு சென்றுவிடும் அவ்ளோ சுலபமாக இருக்கு. இந்த சுலபமான வழிமுறையை வைத்து 100 கோடிக்கு அதிகமான நபர்களின் போன் நம்பர் Expose ஆகி இருக்கிறது என்றால் சொன்னால் நம்ப முடிகிறதா வாருங்கள் அது குறித்து தெரிந்து கொள்வோம்.
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இதை வெளிக்கொண்டு வந்து இருக்காங்க அதாவது நான் மேல சொன்னது போல ஒரு Sequence நம்பர் Generate பண்ணுவது போல ஒரு Automated Script Develop செய்து அதை வாட்ஸப் மூலம் டெஸ்ட் டெஸ்ட் செய்து இருக்காங்க அந்த Script எந்த ஒரு தடையுமே இல்லாமல் ரன் ஆகி அவங்களுக்கு தேவையான நம்பர்களை Scrap பண்ணி கொடுத்து இருக்கு. இதை அவங்க நாடுகளுக்கு ஏற்ப அந்த அந்த நாட்டின் தொலைபேசி Code கொடுத்து செய்து பார்த்து இருக்காங்க அது வேலை செய்து இருக்கு.
இதன் மூலம் அவங்களால ஒரு பயனாளரின் புகைப்படங்கள் ( Profile Picture) , அவங்களோட நம்பர் அதன் பிறகு அவங்களுடைய Profile ஏதாவது ஒரு Content ஏதும் கொடுத்து இருந்தா என்றால் அதையும் அவங்களால Scrap பண்ண முடிந்து இருக்கிறது. இதில் மட்டும் சுமார் 75 கோடி இந்தியாவை சேர்ந்த நபர்களின் Active WhatsApp நம்பர்களை எடுக்க முடிந்து இருக்கிறது அதே போல மற்ற நாடுகளில் உள்ள நபர்களின் நம்பர்கள் எடுக்க முடிந்து இருக்கிறது. அதன் பிறகு இது எல்லாவற்றையும் மெட்டாவிடம் புகாராக அளித்து இருக்கின்றனர், அதன் பிறகு இதில் அவர்கள் கவனம் Anonymous Data Scraping தடுப்பதாக சொல்லி இருக்காங்க. அதோடு Anti Scraping வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற போவதாகவும் சொல்லி இருக்காங்க. மெட்டா நிறுவனத்திடம் இது குறித்து Report செய்த பிறகு இந்த தரவுகளை Delete செய்து இருக்காங்க.
அதன் பிறகு கடந்த October மாதம் இந்த Vulnerability மெட்டா நிறுவனம் Patch செய்து இருக்காங்க அதாவது Automated Data Scraping Block பண்ணி இருக்காங்க. இதற்கு முன்னர் ஹேக்கர்ஸ் யாராவது ஒருவர் இதே வழிமுறையை பின்பற்றி இருந்தால் அவர்களிடம் Active நம்பர்கள் இருக்கும்.
அதன் மூலம் Targeted Scams, Scam Advertisement , Phishing அல்லது நமது தரவுகளை அடுத்தவர்களுக்கு விற்று பணமாக்கி இருக்கலாம்.





