Proton புதிதாக அவங்களோட டூல்ஸ்ல இப்ப Proton Sheets புதியதாக சேர்த்து இருக்காங்க, அதன் மூலம் நீங்க கூகிள் சீட் மற்றும் MS excel மாற்றமாக நீங்க இதையும் பயன்படுத்தலாம் முழுக்க முழுக்க உங்களோட தரவுகள் எல்லாமே Encrypt ஆகி இருக்கும். அதை யாராலும் பார்க்க முடியாது ஏன் Proton நிறுவனத்தால் கூட முடியாது.
Credits : Proton
நீங்க Proton பயனாளராக இருந்தால் அவங்களோட டிரைவ் போயிடு நீங்க பார்த்தீங்க அப்டினா அதுல உங்களுக்கு Sheet இருக்கும் அதன் மூலமா நீங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதோட Interface எல்லாமே நாம எப்போதும் பயன்படுத்தும் sheets போலவே தான் இருக்கும். அதனால நமக்கு எந்த ஒரு குழப்பமும் இருக்காது. இதை நீங்க உங்களோட Web Browser மூலமாகவும் அல்லது உங்களுடைய Mobile மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்களோட Data எல்லாம் பிரைவசியோட இருக்கனும் அப்டினா இதை நீங்க பயன்படுத்திக்கொள்ளலாம், அவங்க மெயில் services, VPN போன்ற சேவைகளை வழங்கிட்டுவாரங்க.





