கடந்த 2 வாரங்களில் நமது இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பெயரை செய்திகளில் அடிக்கடி காண வேண்டி இருக்கிறது, அதுவும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய புதிய திட்டத்தோடு மொபைல் நிறுவனகளையும் பயனாளர்களையும் ஒரு வித பதட்டத்தோடு வச்சு இருக்காங்க, முதலில் சஞ்சர் சாதி என்று ஒரு சைபர் தொடர்பான செயலில் நம்மினுடைய அனைத்து மொபைல்களிலும் Pre Installed பண்ணி இருக்கனும் என்று மொபைல் தயாரிப்பு நிறுவங்களுக்கு உத்தரவிட்டாங்க அதன் பிறகு மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது இது Surveillanceக்கு வழி வகுக்கும் என்று. அதன் பிறகு அவர்களே வந்தே இந்த தேவையென்றால் Install பண்ணி கொள்ளலாம் கட்டாயம் கிடையாது என்று சொன்னாங்க.

ஆனால் யாரும்விடுவதாக இல்லை இப்படி வாய்மொழி உத்தரவுயெல்லாம் சரிவராது அதிகாரபூர்வமாக வெளியிட்டால் மட்டும் தான் இதை நடைமுறைப்படுத்தபடாது என்று சொன்னாங்க, அதோட ஆப்பிள் நிறுவனம் நேரடியாகவே இதை தங்களுடைய மொபைல் கொண்டு வரமாட்டோம் அப்டினு சொன்னங்க. அதன் பிறகு அமைச்சகம் இது கட்டாயம் கிடையாது நாங்க சொல்ல வந்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று விளக்கம் கொடுத்தாங்க. சரி இதோட முடிந்தது அப்டினு நினைக்கும் போதே அடுத்து ஒரு பரிந்துரையோட வந்து இருக்காங்க நம்முடைய அரசு,
Cellular Operators Association of India என்றும் நிறுவனம் அரசுக்கு ஒரு பரிந்துரையை கொடுத்து இருக்காங்க அதாவது எப்போதுமே Satellite Based GPS ஆன்ல இருப்பது போல செய்யும்படி மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சொல்லி இருக்காங்க. இதன் மூலம் விசாரணை அமைப்புகளுக்கு துல்லியமான Location Access கிடைக்கும் என்று சொல்லி இருக்காங்க. ஆனால் கடைசி முறை போல காத்து இருக்காமல் மொபைல் நிறுவங்கள் இதற்கு எதிராக நாங்க இதுவே போல செய்யமுடியாது இது பயனாளர்களின் பிரைவசியை பாதிக்கும் என்றும். இது பயனாளர்களிடம் எப்பொழுதும் நாங்கள் காண்காணிப்பிலே இருப்பது போன்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி இருக்காங்க.
இது குறித்து இன்னும் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றாலும் கூடிய விரைவில் இதற்குண்டான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது அதன் பிறகு நிறுவனங்களுக்கு இதற்கு எப்படி செயலாற்றுகிறார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மணித உரிமை நிறுவங்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.





