VLC மீடியா Player நாம எல்லாரும் புதிதாக ஒரு Computer வாங்குனோம் அப்டினா அதுல முதல்ல Install பண்ணுவது இந்த Application தான் முதல் காரணம் இது Free அதன் பிறகு இந்த Application அளவுக்கு எந்த வேறு ஒரு Application Market இதுவரைக்கும் இல்லை என்று தான் சொல்லணும், அதோட இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்று பார்த்தோம் அப்டினா இது ஒரு Open Source Application இது நாள் வரைக்கும் பல பேர் Volunteer ஆக கொடுக்குற Donation மூலம் மட்டுமே இயங்கிக்கிட்டு இருக்காங்க. இவங்க இப்ப சமீபத்தில 6 Billion Download Cross செஞ்சு இருக்காங்க அதனை தொடர்ந்து அவங்க ஒரு புதிய Feature அறிமுகம் செய்ய போன்றதாக சொல்லி இருக்காங்க. ஆனால் அதை அவங்க Implement செய்ய போகிறவிதம் எல்லாரையும் ஆச்சரிய பட வைத்து இருக்கிறது.
இந்த Feature அவங்க எங்க அறிமுகம் செய்தாங்க அப்டினா வருடம் தோறும் நடைபெறும் அமெரிக்காவில் நடைபெறும் Consumer Electronic Showல தான் அவங்களோட President Jean Baptisite இதை அறிமுகம் செய்தாரு அதாவது நாம VLC மூலமாக பார்க்குற வீடியோக்கள் எல்லாவற்றிற்கும் Auto Subtitle வருவது தான் இந்த புதிய Feature இதெல்லாம் ஒரு புதிய Feature அப்டினு கேக்காதீங்க ஆனால் அதை அவங்க கொண்டுவந்து இருக்குற விதம் தான் புதுமையானது அதாவது நாம பார்க்குற வீடியோக்களுக்கு Subtitle Generate ஆகும் என்று சொன்னேன் பார்த்திங்களா அது எல்லாமே எந்த ஒரு இணையதள உதவியும் இல்லாமல் Offline Generate ஆகும் அதுவும் 100 மொழிகளில்.
இதை அவங்க எப்படி சாத்தியபடுத்தி இருக்காங்க அப்டினு பார்த்தோம்னா Open Sourceல available இருக்குற ஒரு சில Ai Model கொண்டு இந்த Feature உருவாக்கி இருக்காங்க, அவங்க பயன்படுத்தும் Ai Model எல்லாமே Pre Trained ஆக இருக்கும் அதன் மூலமா நமக்கு இணையதள உதவியே இல்லாமல் Subtitle எல்லாமே Generate ஆகும்.
பல Billion கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு Toolல் இது போல ஒரு பயனுள்ள Feature அதுவும் இலவசமாக கிடைக்கப்பது ஆச்சரியம் தான். ஆனால் இந்த Feature எப்ப Release ஆகும் அப்டினு எந்த ஒரு அறிவிப்பும் VideoLan நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை.





