நாம முதல் முதலாக ஒரு Account ஆன்லைன்ல ஓபன் பண்ணியிருப்போம் அப்படின்னா அது கண்டிப்பாக ஒரு ஈமெயில் அக்கௌன்ட் ஆக தான் இருக்கும் அதிலும் பெரும்பாலும் எல்லாரும் Gmail தான் ஓபன் பண்ணி இருப்பிங்க மற்ற மற்ற ஈமெயில் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இருந்தாலும் ஜிமெயில் அதிகமான நபர்கள் ஓபன் பண்ணி இருப்பாங்க ஏன்னா அந்த ஒரு அக்கவுண்ட் மூலம் கூகுள் ஒட பல்வேறு சேவைகளை நாம பெற முடியும். அப்படி நாம ஓபன் பண்ணும் போது நம்மளோட அக்கௌன்ட்க்கு ஒரு பெயர் வச்சு இருப்போம் உதாரணமாக சொல்ல போனால் ramesh1999@gmail.com அல்லது suresh2004@gmail.com என்று எதாவது ஒரு பெயர் இருக்கும்.
அதிலும் ஒரு சில பேருக்கு தான் அவங்களோட பிறந்த வருடத்தோட அமையும், இல்லைனா வேற எதாவது கொஞ்சம் பார்த்து நாம தேர்வு செய்து வைத்துக் கொள்ளனும். இப்படி ஒரு சிக்கல் ரொம்ப நாளாகவே இருந்துட்டு இருக்கு. நம்மளோட அக்கவுண்ட் பெயரை மாற்றவே முடியாது ஒரு முறை வச்சுட்டா அவ்ளோதான். இப்ப அதை சரி செய்யும் விதமாக கூகிள் நம்மளோட அக்கவுண்ட் பெயரை மாற்றி கொள்ளலாம் அப்டினு சொல்லி இருக்காங்க. அதாவது நம்மளோட பெயர் antony00@gmail.com என்று இருக்குனு வைங்க அதை நாம அதை markantony@gmail.com என்று ஒரு alias உருவாக்கி கொள்ள முடியும்.
இதன் மூலம் நம்மளோட பழைய ஈமெயில் ஆன antony00@gmail.com அதற்கும் மெயில் வரும் புதிய மெயில் ஆன markantony@gmail.com மெயில் வரும் ஏன்னா இரண்டுமே ஒரு Inboxல இணைந்து இருக்கும். அதே போல ஒரு வருடத்தில் நமக்கு முறை நீங்க பெயரை மாற்றி கொள்ளலாம். முதன் முதலில் நீங்க உருவாக்கிய பெயர் அப்படியே இருக்கும் அதோட கூடுதலாக சேர்த்து இன்னொரு பெயரிலும் உங்களுக்கு ஜிமெயில் இருக்கும். இதுல ஒரு சிக்கல் என்ன அப்படின்னு பார்த்தோம்னா நீங்க புதிதாக உருவாகும் மெயில் அட்ரஸ் Available இருக்கனும் அப்படி இருந்தா மட்டும் தான் நீங்க புதிய அட்ரஸ் உருவாக்கி கொள்ள முடியும்.
இப்போதைக்கு இந்த இந்தியாவில மட்டும் தான் பரிசோதனைல இருப்பதாக சொல்லி இருக்காங்க அதன் பிறகு மற்ற மற்ற நாடுகளும் விரிவடையும் என்று சொல்றாங்க.





