இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதாவது இந்தியாவில் வெளியாகும் மொபைல் போனிகளில் Sanchaar Sathi என்ற ஒரு சைபர் பாதுகாப்பு செயலியை நிறுவனங்கள் Pre Installed ஆக கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தாங்க அதன் பிறகு இந்த உத்தரவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த உடன் இந்த செயலியை தேவைபடுபவர்கள் மட்டும் நிறுவிக்கொள்ளலாம் என்று கூறி இருக்காங்க.

இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் மற்றொரு அறிவிப்பு வந்து இருந்தது அந்த அறிவிப்பு என்ன என்று பார்த்தோம்னா, நம்முடைய மொபைல்களில் Messaging Application ஆக இருக்கும் வாட்ஸாப்ப் மற்றும் டெலெக்ராம் போன்ற Application இனி Active Sim இல்லாமல் இயங்க கூடாது அப்டினு தொலைத்தொடர்பு அமைச்சகம் சொல்லி இருக்காங்க, அதோட மட்டுமில்லாமல் நம்முடைய கணினிகளில் நாம ஓபன் செய்து வைத்து Sessions எல்லாமே 6 மணிநேரத்திற்கு பிறகு தானாகவே Logout செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்காங்க. இதன் மூலம் சைபர் குற்றங்களை தடுக்க முடியும் அப்டினு அவங்களோட பரிந்துரை காரணங்களில் குறிப்பிட்டு இருக்காங்க.
இது போல செய்வது நல்லது என்றாலும் ஒரு சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றது அதாவது வேலை நிமித்தமாக நாம நம்முடைய கணினிகளில் வாட்ஸாப்ப் போன்ற செயலிகளை ஓபன் செய்து வைத்து இருப்போம் அது Auto Logout ஆகிறது என்றால் பயனாளர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். அதோட ஒரு வேலை நம்முடைய மொபைல் போன் ஏதும் தொலைந்து போனாலே திரும்ப நம்முடைய டேட்டாவை மீட்பது சிரமாக இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இதற்கு உண்டான தீர்வை கொடுத்து நடைமுறைப்படுத்தினால் நல்லது.





