OpenAI அவங்களோட Products எல்லாவற்றையும் ஒரு Consumer Products போல மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்காங்க, சமீபத்திய ஒரு உதாரணம் சொல்லணும் என்றால் அவர்களுடைய Sora Android Application சொல்லலாம் ஒரு சிறிய சமூக வலைத்தளம் போல அது இயங்கி கொண்டு இருக்கு. இப்போது அடுத்ததாக ChatGpt Applicaitonல Group chat கொண்டு வந்து இருக்காங்க. இந்த Group Chat எப்படி செயல்படுவது இதனால பயன் இருக்குமா என்று பார்ப்போம்.
நம்முடைய அன்றாட அலுவலக வேலைகளில் தவிர்க்க முடியாது ஒரு இடத்தை Chat Gpt பெற்றுவிட்டது என்று தான் சொல்லணும் அந்தளவுக்கு நமக்கு உதவிகரமாக இருக்கிறது ஒரு சிறிய மெயில் எழுதுவதில் இருந்து ஒரு Code Review செய்வது வரை நாம அதை சார்ந்துதான் இருக்கின்றோம் ஒரு சிறிய சதவித்தினரை தவிர, இப்போது அதில் கூடுதலாக ஒரு புதிய Feature அறிமுகம் செய்து இருக்காங்க OpenAI அதாவது Group Chat.

Image Credits : Open AI
ஒரு எடுத்துக்காட்டாக சொல்லணும் அப்டி என்றால் நீங்கள் ஒரு Script தயார் செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொள்வோம் ஒரு Draft நீங்க தயார் செய்த பிறகு அதை Chat Gpt கொடுத்து மெருகேற்ற சொல்லி கேட்பீர்கள் அல்லது சிறிய சிறிய மாற்றங்கள் செய்து கொண்டு இருப்பிர்கள். அதன் பிறகு உங்களுடைய டீம் இடம் கொடுத்து அதில் ஏதாவது ஒரு மாற்றங்கள் அல்லது மேம்பாடுகள் செய்ய சொல்லி இருப்பிர்கள் அதற்கென்று தனி ஒரு Group Whatsapp அல்லது Slack அல்லது வேறு ஏதும் ஒரு Applicationல் வைத்து இருப்பிங்க அதில் Share செய்து கருத்துக்கள் கேட்பிங்க அவங்களும் ஏதாவது ஒரு சில மாற்றங்கள் சொல்லுவாங்க அதன் பிறகு திரும்பவும் Chat Gpt இடம் சென்று மாற்றியமைப்பீர்கள் இனி அது போல செய்யாமல் Chatgptயிலேயே நீங்க உங்களென்று ஒரு தனி குரூப் ஆரம்பம் செய்து அதில் உங்களுடைய டீம் Add செய்யலாம் அதன் மூலம் அதிலேயே நீங்கள் மாற்றங்கள் எல்லாமே செய்யலாம் இதன் மூலம் உங்களுடைய வேலைகள் மிக எளிதாகும்.
நீங்கள் உருவாக்கும் குரூப்பில் 20 நபர்கள் வரை Add செய்யலாம் அதன் பிறகு அவங்களை நீக்குவது, Mute செய்வது என்று ஒரு Whatsapp Groupல் இருப்பது போல் செயல்படும். ஆனால் இதில் இருக்கும் ஒரு குறை என்னவென்றால் யார் வேண்டும் என்றால் உங்கள் குரூப்பில் உள்ள Conversation பார்க்க முடியும் அதோடு இந்த குரூப்பில் சேரவும் முடியும் அதன் பிறகு குரூப் Creator கண்டறிந்து நீக்க வேண்டும். அதோடு இதுல நீங்க எமோஜிஸ் கூட பயன்படுத்த முடியும்.
இப்போதைக்கு ஒரு சில நாடுகளில் மட்டும் தான் கொண்டு வந்து இருக்காங்க ஒரு Test purpose அதன் பிறகு எல்லோருக்கும் கிடைக்கபெறும்.





