சரியாக சொல்லப்போனால் ஒரு நாளுக்கு முன்னர் நம்முடைய அரசு இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொபைல் போன்களிலும் Sanchaar Sathi என்ற ஒரு Application Pre Installed ஆக இருக்கனும் அப்டினு சொல்லி இருந்தாங்க மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவுக்கு பிறகு கடுமையான எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன இந்த Application மூலம் அரசு தனி ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க முடியும் அதோட அந்த தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்குமா என்று பல்வேறு கேள்விகளை தனியுரிமை பாதுகாப்பு ஆர்வலர்கள் எழுப்புனாங்க. அப்போதே இது நடைமுறைப்படுத்தபட்டாலும் ஆப்பிள் நிறுவனம் இதை நிச்சயம் நடைமுறைப்படுத்தமாட்டாங்க அப்டினு சொல்லி இருந்தோம்.

அது போலவே ஆப்பிள் நிறுவனம் இதை தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் கொண்டு வர போவதில்லை என்று சொல்லி இருக்காங்க இது குறித்த செய்தி Reuters நிறுவனம் பகிர்ந்து இருந்தாங்க. அதன் பிறகு இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இந்த Application பயனாளர்கள் தேவைப்பட்டால் தங்களுடைய மொபைல்களிருந்து நீக்கம் செய்து கொள்ளலாம் என்று சொன்னாங்க அதன் பிறகு நேற்றைய தினம் மீண்டும் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மொபைல் போன் நிறுவனங்கள் இதை Pre-Install செய்ய கட்டாயமில்லை என்று சொல்லி இருக்காங்க.
அதோட பயனாளர்கள் தேவைப்பட்டால் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று விளக்கி இருக்காங்க.





