கூகுளை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அவங்களோட ஏதாவது ஒரு சேவைகளை நிறுத்துவாங்க அந்த வகைல இந்த அடுத்த ஆண்டு முதல் அவங்களோட Dark Web Report Feature நிறுத்த போவதாக சொல்லி இருக்காங்க.
முதல அது என்ன Feature என்று பார்ப்போம், இந்த Feature நம்மளோட Google My Activity மூலம் Access பண்ணலாம், இதன் மூலமாக நம்மளோட ஈமெயில் அல்லது நம்மளோட விபரங்கள் எதாவது டார்க் வெப் இணையத்துல வெளியாகி இருக்காங்க அப்டினு, செக் பண்ணுவாங்க அப்படி ஏதும் வெளியாகி இருந்தால் அதை நமக்கு Notify பண்ணுவாங்க அதன் மூலம் நம்மளோட தகவல்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
முதன் முதலில் இந்த Feature கூகிள் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு கொண்டு வந்தாங்க அதன் பிறகு எல்லாப் பயனாளர்களுக்கு கொடுத்தாங்க. இப்போது இதை நிறுத்த போவதாக சொல்லி இருக்காங்க ஜனவரி 15 முதல் இந்த டூல் வேலை செய்வதை நிறுத்தப்போவதாகவும் அதன் பிறகு பிப்ரவரி 16 முதல் இது முற்றிலும் நீக்கப்படும் என்று சொல்லி இருக்காங்க.





