நாம இணையத்துல பார்க்கின்ற அதிகமான வீடியோஸ் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோகளாக தான் இருக்கிறது. அதோடு எந்த வீடியோ உண்மையானது எது AI என்று தெரியாது அளவுக்கு இப்போது அதிகமான டூல்ஸ் கிடைக்கபெறுது. நாம ஒரு வீடியோவை கூர்ந்து கவனித்தால் மட்டுமே எது அசல் என்று தெரிந்து கொள்ள முடியும்.
இதை எளிதாக்கும் வகையில் கூகிள் ஒரு Update ஒன்னு கொடுத்து இருக்காங்க அதாவது நீங்க கூகிள் சம்மந்தப்பட்ட AI டூல்ஸ் மூலமாக ஒரு வீடியோ Generate ஆகி இருந்தால், அதை எதார்த்தமாக நீங்க சமூக வலைத்தளங்களில் பார்த்து அது AI Generate ஆணு தெரிந்துகொள்ள நீங்க கூகிள் ஜெமினில அந்த வீடியோவை பண்ணி கேட்டிங்க அப்டினா உங்களுக்கு சொல்லும் இந்த இடத்தில இருந்து இது வரை AI Generated அப்டினு அல்லது குறிப்பிட்ட Timestamp கொடுத்து சொல்லும்.
அந்த வீடியோ கூகிள் டூல்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாக இருந்தால் மற்ற வீடியோ உருவாக்க டூல்ஸ் மூலம் நீங்க பண்ணி இருந்திங்க அப்டினா கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம், அதோட இதை கூகிள் எப்படி கண்டுபுடிக்கிறாங்க அப்டினு பார்த்தோம்னா ஒவ்வொரு வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்கும் போது அதோடு சேர்ந்து Synth ID என்று ஒன்று உருவாகும், எளிமையாக சொல்லணும் அப்டினா ஒரு Invisible Watermark என்று கூட சொல்லலாம். அதை வைத்து தான் இவங்க கண்டுபுடிக்கிறாங்க இதை மற்ற டூல்ஸ் பண்ணுவதில்லை அவங்களுக்கு இது போல கொண்டுவந்தாங்க அப்டினா நமக்கு கண்டுபிடிக்க சுலபமாக இருக்கும்.





