Domain ஒட விலை 120 கோடியா?

domain for sale

நாம ஏதாவது ஒரு தகவலை இணையத்தில் தேட ஒரு இணையத்தளம் தேவை கண்டிப்பா அந்த இணையதளத்திற்கு ஒரு பெயரும் வேண்டும் உதாரணமாக சொல்ல போனால் Google, Yahoo அப்டினு சொல்லிட்டே போகலாம் அவங்களோட மக்கள் மத்தியில அதிகமாக பேசப்பட காரணம் அவங்களோட Domain Name தான் காரணம். இதுக்காக பல கோடிகள் கொடுத்து அந்த பெயர்களை பெரிய நிறுவனங்கள் வாங்குவாங்க தெரியும் அப்படி ஒரு மிக பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்ட ஒரு Domain பற்றி தான் இந்த பதிவில பார்க்கபோறோம்.

Open Ai எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பிங்க அவங்க ஒரு இரண்டு நாளைக்கு ட்விட்டர்ல ஒரு Tweet ஒன்னு update பண்ணாங்க அதவாது Chat.com அப்டினு அதை Click பண்ணா அவங்களோட Chatgpt இணையதளத்திற்கு Redirect ஆகும். இப்ப அந்த Domain ஒட Purchase History தான் பார்க்கபோறோம். இந்த Domain Name 1996 Register பண்ணி இருக்காங்க அதன் பிறகு இதை Hubspot Co-Founder 15 மில்லியன் டாலர் வாங்கி இருக்காரு (இந்திய மதிப்பு எப்படியும் 120 கோடிக்கு மேல் இருக்கும்) அதன் பிறகு இந்த ஆண்டு Marchல அவரோட Linkedinல ஒரு பதிவு ஒன்னு செய்தார் இந்த Domain வேறு ஒருவருக்கு Sale பண்ணிட்டேன் அப்டினு ஆனால் அப்போதைக்கு அவர் Buyer பெயர் ஏதும் வெளியிடவில்லை Unknown Source அப்டினு தான் குறிப்பிட்டு இருந்தாரு.

அதன் பிறகு இப்போது தான் Open Ai அந்த பெயரை வெளியிட்ட உடன் இவரும் சொல்லி இருக்காரு Open Ai தான் வாங்கி இருக்காங்க எனக்கு Payment Shares கொடுத்து இருக்காங்க அப்டினு இவரே 15 மில்லியன் கொடுத்து வாங்கி இருக்காரு அப்டினா Open Ai கண்டிப்பா ஒரு 25 மில்லியன் இருந்து 30 மில்லியன் வரை கொடுத்து வாங்கி இருக்கலாம் அப்டினு சொல்றாங்க.

இந்த Domain Sale Publicல நடந்த Sale அப்டினு சொல்றாங்க.

மேலும் இது குறித்து தெளிவாக அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.

Share this :
Mohamed

I’ve been covering technology news and sharing useful insights from it. I also highlight open-source tools and mobile applications that can be helpful for everyone. Beyond tech, I write about a variety of topics, including personal experiences, travel, and day-to-day life.

Follow Me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *