நாம எதாவது ஒரு இணையத்தளம் வைத்து இருந்தோம் அப்டினா அதை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதோட பயனாளர் நம்மளோட இணையதளத்தை அணுகும் போது அதை சுலபமா குறிப்பிட்டு சொல்லப்போனால் வேகமா அணுகவதற்கு நாம Cloudflare என்ற நிறுவனத்தை சார்ந்து இருக்கின்றோம். நாம மட்டுமில்ல பெரிய பெரிய நிறுவனங்களுமே அவங்களுடைய இணையதளத்தை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க இவர்களை தான் நம்பி இருக்காங்க. அதனால தான் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறில் மொத்த இணையத்தளமுமே ஒரு சில மணிநேரங்களுக்கு திணறித்தான்போனது.

Image Credits : Cloudflare
சரியாக இந்திய நேரப்படி ஒரு 4: 30 மணி அளவில் எங்களுடைய நிறுவனத்தின் இணையத்தளங்களும் இயங்கவில்லை சரி எதாவது இன்டெர்னல் டீம் அப்டேட் செய்யும்போது ஏற்பட்ட கோளாறாக இருக்கும் என்று அவர்களை தொடர்புகொள்ளும் முன்பே அவர்களிடம் இருந்து எங்களுக்கு மெயில் வந்து இருந்தது. அதன் பிறகு DNS Checker என்ற ஒரு இணையத்தளம் இருக்கிறது அதில் போகி பார்க்கலாம் என்றால் அதுவும் இயங்கவில்லை, அதன் பிறகு வேறு ஒரு இணையத்தளம் அதன் பிறகு ChatGpt என்று எதை பார்த்தாலும் இயங்கவில்லை. அதில் எல்லாம் பிரதானமாக இருந்தது Cloudflare என்ற ஒற்றை வார்த்தை சரி DownDetector போகி பார்க்கலாம் என்றால் அதுவும் Down. அதன் பிறகு ட்விட்டர் சென்று Cloudflare Down search செய்த பிறகு தான் விசயமே தெரியவந்தது Cloudflare உலகம் முழுக்க இயங்கவில்லை என்று.
அதன் பிறகு இது குறித்து ஒரு மெயில் Ready பண்ணி எல்லாருக்கும் அனுப்பிவிட்டுட்டு ட்விட்டர் பக்கம் கொஞ்சம் ஒதுக்குங்குவோம் என்று பார்த்தால் Feed வருது போகுது அப்டியே இருந்தது. சரி இதற்கு மேல் ஒன்னும் செய்ய முடியாது என்று தெரிந்த கொண்டு நாளை (இன்று) பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். அதோட Cloudflare நிறுவனத்திடம் இருந்தே இந்த Outage குறித்து ஒரு பெரிய Blog வெளியிட்டு இருக்காங்க.

Image Credits : Cloudflare
அந்த Blogல முதலில் இந்த Outage ஒரு Cyber தாக்குதல்களாக இருக்கும் என்று நினைத்து இருக்காங்க, அதை மீட்டெடுக்ககின்ற வேலைகளில் இயங்கி கொண்டு இருக்கும் போது இது சைபர் தாக்குதலால் ஏற்பட்ட Outage இல்லை. இது ஏற்ப்பட்டதுக்கான முக்கிய காரணம் அவங்களோட Databaseல அவங்க மேற்கொண்ட ஒரு File Change ஒட்டுமொத்தமா எல்லா இணையதளத்தையும் முடக்கி இருக்கு. ஓரு சில பேர் பார்த்து இருப்பிங்க உங்களோட இணையத்தளம் Live வந்துட்டு திரும்ப போகி இருக்கும் அதற்கான காரணம் அந்த File தான் 5 நிமிடத்திற்கு ஒரு முறை Reupload ஆகி இருக்கு அவங்களோட Databaseல அதன் பிறகு இதையெல்லாம் கண்டுபுடித்து சரி செய்வதற்கு கிட்டத்தட்ட ஒரு நான்கு மணிநேரத்திற்கு மேல ஆகி இருக்கு.
இணையத்தில் இயங்கக்கூடிய இணையதளங்களில் 2௦ சதவீதம் அவர்களுடைய சேவைகளை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம் என்று சொல்லி இருக்காங்க Cloudflare.





