Spotifyல எப்படி நாம ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் இறுதியில் Spotify Wrap என்று வெளியிடுவாங்க, அதன் மூலம் அந்த ஆண்டில் நீங்கள் எந்த ஆல்பம் அதிகம் கேட்டு இருக்கிறார்கள், எந்த இசையமைப்பாளரின் பாடல்களை அதிகம் கேட்டு இருக்கின்றார்கள் என்று ஒரு சின்ன Wrap கொடுப்பாங்க. அதே போல இந்த வருடம் ChatGpt year End Wrap ஒன்னு கொடுத்து இருக்காங்க.

Credits : Open AI
அதன் மூலம் நாம என்னை அதிகமாக தேடி இருக்கின்றோம்,என்னென்ன கேள்விகள் அதிகமா கேட்டு இருக்கின்றோம் அதிகமாக எதற்காக பயன்படுத்தி இருக்கின்றோம் என்றெல்லாம் அதன் பிறகு என்ன மாதிரியான பொருட்கள் குறித்து தேடி இருக்கிறோம். இன்னும் எளிமையாக சொல்லணும் என்றால் உங்களுடைய Chat History அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற ஒரு Title கொடுப்பாங்க. அதன் பிறகு Flashy Cardல நமக்கு தேவையான தகவல்கள் எல்லாம் வரும்.

Credits : Open AI
இது Update Free, Plus மற்றும் Pro plans உள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்து இருக்காங்க, Enterprise மற்றும் Education Account உள்ளவர்களுக்கு இந்த Wrap Access பண்ண முடியாது. அதோடு மட்டுமில்லாமல் இந்த Update அமெரிக்கா, கனடா, யூகே , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மட்டும் கொடுத்து இருக்காங்க.
ஒரு வேலை உங்களுக்கு இந்த Wrap பார்க்கணும் அப்டினா Chatgptல இந்த ஒரு Prompt “GPT Wrapped” கொடுத்தீங்க அப்டினா உங்களுக்கு மேல சொன்னது போலவே ஒரு Wrap வரும் அதை வைத்து நம்முடைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.





