Open AI நிறுவனம் அவங்களோட அடுத்த Model வெளியிட்ட நேரத்தில ஒரு முக்கியமான டீல் டிஸ்னி நிறுவனம் செய்து இருக்காங்க, அதாவது Sora வீடியோ Generation மாடல் அவங்களோட Disney Characters பயன்படுத்தலாம் அப்டினு சொல்லி இருக்காங்க. அதோடு Open AI நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் வரையும் டிஸ்னி முதலீடும் செய்து இருக்காங்க. இந்த டீல் மூன்று வருடம் வரையும் இருக்கும் என்று சொல்லி இருக்காங்க.

Credits : Open AI
டிஸ்னி உரிமம் கொடுத்தனால அவங்களோட பிரபலமான கதாபாத்திரங்கள் ஆன Mickey Mouse, Cinderella and Mufasa இதையெல்லாம் அவங்க பயன்படுத்தி வீடியோ Generate பண்ணலாம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வீடியோ Generation மாடல் துவங்குவாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டீல் அனிமேஷன் Creators மத்தியில ஒரு சில அச்சத்தை ஏற்படுத்தி இருக்கு, இது டீல் அமலுக்கு வந்த பிறகு திரையுலகில் என்ன மாற்றத்தை கொண்டு வருது அப்டினு பொருந்து இருந்து பார்க்கணும்.





