ஒரு சில வாரங்களாக சீனாவுல ஒரு ஆப் ரொம்ப ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு அது என்ன ஆப் எதன் காரணமாக அந்த ஆப் ட்ரெண்ட் ஆகி இருக்கு அப்டினு தெரிந்துகொள்வோம் வாங்க.
உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவுல தனியா வசிப்பவர்கள் ரொம்பவே அதிகம் என்று சொல்லலாம் அவர்களுடைய வீடுகளைவிட்டு தனியாக தங்கி வேலை பார்ப்பவர்கள், அதன் பிறகு படிப்பிற்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்பவர்கள் அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கையை தனியா வாழ விருப்பப்பட்டு இருப்பவர்கள் என்று ஏராளமான பேர் இருக்காங்க. அதோட மட்டுமில்லாமல் சீனாவில் 2030 ஆண்டிற்குள் தனியாக வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 மில்லியன் அளவு இருக்கும் என்று சொல்றாங்க.

சரி இதுக்கும் மேல சொன்ன ஆப்க்கும் என்ன சம்மந்தம் இருக்கு என்று பார்த்தோம்னா. இப்படி தனியாக வசிப்பவர்களை Target Audience ஆக வைத்தே ஒரு Application ஒன்னு உருவாகி இருக்கு அதோட பெயர் Demmu. இந்த Application ஒட நோக்கம் என்ன அப்டினு பார்த்தீங்கன்னா மேல சொன்னது போல நீங்க தனியா வசிச்சிட்டு வரீங்க அப்டினா இந்த Application Install பண்ணிட்டு ஒவ்வொரு 48 மணிநேரத்திற்கு நீங்க Check In பண்ணனும். அப்படி நீங்க Check In பண்ணலை என்றால் இந்த Application நீங்க கொடுத்து இருக்க Emergency Contact நம்பருக்கு Message அனுப்பிரும்.
அதாவது இந்த Account Holder Inactive ஆக இருக்காங்க என்னாச்சுனு அவங்களை Check பண்ணுங்க அப்டினு, இந்த Application கடந்த வருடம் மே மாதம் 2025ல வெளியிட்டாலும் இப்ப திடிர்னு ரொம்ப ட்ரெண்ட் ஆக ஆரம்பிச்சுருச்சு. அதோட மட்டுமில்லாமல் சீனாவிலே அதிகம் டவுன்லோட் பண்ணப்பட்ட Paid Application ஆகவும் மாறி இருக்கு. இதோட ஆப் விலை 2 டாலர் தான் இதனால அதிகமான மக்கள் இதை டவுன்லோட் செய்து இருக்காங்க.
நம்மூர்ல இதோட விலை 100 ரூபாய் என்று நினைக்கிறேன். இந்த Application இப்பொழுது ஹாங்காங், USA மற்றும் சிங்கப்பூர்ல ட்ரெண்ட் ஆக ஆரம்பிச்சு இருக்கு.





