Marques Brownlee Tech சம்மந்தமாக எந்த ஒரு Gadget வெளிவந்தாலும் அதை முறையாக Review பண்ண ஒரு ஆள் இருக்காரு அப்டினு பார்த்தோம்னா அது இவர் தான் சுருக்கமாக MKBHD என்று எல்லாரும் சொல்லுவாங்க நீங்க Tech ரொம்ப நாளா Follow பண்ணுறீங்க அப்டினா இவரை உங்களுக்கு தெரியாம இருந்து இருக்காது அந்தளவுக்கு இவரோட Influence Tech உலகத்துல இருக்கு. இன்னும் சொல்லபோனால் Youtubeல ஆதி காலத்தில் இருந்து இயங்கிட்டு இருக்குற ஒரு Youtuber என்று கூட சொல்லலாம், உலகம் முழுக்க இவரோட Fans இருக்காங்க ஏன் இவரை பற்றி எழுதிட்டு நானும் அதுல ஒரு ஆள் கூட என்று தான் சொல்லணும், அப்ப அவரை பற்றி தான் இந்த பதிவா என்று கேட்டால் அவரை பற்றி அல்ல ஆனால் வெளியிட்ட அவரோட ஒரு Application பற்றி தான் இந்த பதிவு.

இந்த வாரம் திங்கட்கிழமை சமீபத்தில் வெளிவந்த ஐபோன் Review வீடியோவில் அவரோட ஒரு Wallpaper Application வெளியிட்டாரு இதுல என்ன தப்பு இருக்கு அப்டினு பார்த்தோம்னா எந்த ஒரு தப்பும் இல்லை அதேபோல யார் வேணாலும் எதையும் வெளியிடலாம், ஆனால் தப்பு எங்க இருக்கு அப்டினு பார்த்தோம்னா அந்த Appல உள்ள Wallpapers Download பண்ணுவதற்கு அவர் கேட்ட Subscription பணம் தான் அவரோட Fans கொந்தளிக்க வச்சு இருக்கு அதாவது வருடத்திற்கு 50 டாலரும் அதோட நீங்க மாத Subscription எடுத்தாங்க அப்டினா 12 டாலரும் கட்ட வேண்டி இருக்கும் அவங்களோட Hd Wallpaper Download பண்ணுவதற்கு சரி Free version இல்லையா அப்டினு கேட்டா Free Version ஆனால் அதுக்கு நீங்க ஒரு இரண்டு Ads பார்க்கணும் அதன் பிறகு உங்களுக்கு Wallpaper கிடைக்கும் ஆனால் அதும் Full Hd கிடைக்காது வெறும் Low Qualityla தான் உங்களுக்கு கிடைக்கும் அப்டினு சொல்லி இருக்காங்க.
இதையெல்லாம் பார்த்த அவரோட Fans Wallpaper எவனாவது 50 டாலர் கொடுப்பானா அப்டினு போட்டு ட்விட்டர் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க அதோட பல பேர் இந்த App சம்மந்தமே இல்லமே Location Access அதன் பிறகு இன்னும் ஒரு சில தேவையில்லாத Permission எல்லாம் கேக்குது அப்டினு போட்டு துவைச்சு எடுத்தாங்க அவரை கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் நம்முறல Weekendல யாராவது மாட்டுனாத்தான் அடிவிழும் அதுவும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முடிஞ்சுரும் ஆனால் அங்க ஒரு வாரமா வச்சு அடிச்சிட்டு இருக்காங்க, இதான் சாக்குன்னு எல்லாரும் வன்மத்தை கொட்டிட்டு இருக்காங்க அப்டினு தான் சொல்லானும். இதற்கு ஒரு காரணம் இருக்கு அது என்ன அப்டினு பார்த்தோம்னா Mkbhd ஒரு சில Products Review பண்ணி அது Worstnu சொல்லி அதே நிறுவனமே திவாலாக்குகிற நிலைமைக்கே போயிருக்கு.
சரி என்னதான் இதுல முக்கியமான பிரச்சனை என்று பார்த்தோம்னா Wallpaper நமக்கு Freeyave கிடைக்கும் அதுகவே பிரத்தயேகமானே Social Media Account கூட இருக்கு அவங்க எல்லாம் Freeya கொடுக்குறாங்க அதோட நீங்க Google போகி தேடினால அவ்ளோ கிடைக்கும். அப்படி இருக்கும் போது யார் 50 டாலர் கொடுத்து வாங்குவாங்க அதோட இப்படி Pricing ஒட இருக்குற ஒரு சில Wallpaper Application கூட மாதம் 3 டாலர் வரையும் அதிகம் வாங்குறாங்க அப்டினு நினைக்கிறேன் ஆனால் அதெல்லாம் பெருசா யாரும் பயன்படுத்துல எல்லாரும் Free கிடைக்குற Wallpapers Download பண்ணிறாங்க. இப்படி Freeya கிடைக்குற ஒரு Wallpaper அநியாய Rate கொடுத்தது தான் பிரச்சனை.
இந்த Backlash எல்லாம் வந்த பிறகு இது சமந்தமா Tweet பண்ணி இருக்காரு அதாவது Community மூலமா கிடைச்ச Feedback எல்லாம் ஏத்துக்குறேன் அதோட எல்லாரும் Mention பண்ண Location Tracking அப்பறம் ஒரு சில Unwanted Data Permission இதெல்லாம் Fixபண்ணுறோம் அப்டினு சொல்லி இருக்காரு, என்னதான் இதற்கு ஒரு ட்வீட் போட்டு இருந்தாலும் ஒரு Explanation வீடியோ வந்தா நல்லா இருக்கும், பொறுத்து இருந்து பார்ப்போம்.





