நமது நாட்டின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நம்முடைய நாட்டில் வெளியாகும் அனைத்து விதமான ஸ்மார்ட்போன்களிளும் Sanchar Saathi என்ற ஒரு Application Pre Installed இருக்கனும் அப்டினு சொல்லி இருக்காங்க. அதோட இந்த Application பயனாளர்கள் அதை நீக்கம் செய்ய முடியாது அப்டினு சொல்லி இருக்காங்க. முதலில் இது என்ன application எதனால இதை Implement பண்ண சொல்லி இருக்காங்க அப்டினு பார்ப்போம்.

முதலில் Sanchar Saathi என்ன Application என்று பார்த்தோம்னா, இது ஒரு சைபர் செக்யூரிட்டி தொடர்பான Application இதன் மூலம் நம்முடைய காணாமல் போன மொபைல்களை Block செய்வதற்கும் அதை Trace செய்வதற்கும் இதை பயன்படுத்துறாங்க இது Google Play Store ஏற்கனவே Available தான் இருக்கு. இப்போது இதை தான் இந்திய அரசாங்கம் நம்முடைய மொபைல்களில் Pre Install பண்ணனும் அப்டினு சொல்லி இருக்காங்க அதுவும் அடுத்த 90 நாட்களுக்குள்.
இனி புதிதாக வெளியில் வரும் மொபைல்களுக்கு Pre Installed ஆகவும், ஏற்கனவே இருக்கும் மொபைல்களுக்கு கட்டாய சாப்ட்வேர் அப்டேட் மூலமாகவும் Implement பண்ண சொல்லி இருக்காங்க. இந்த Update பயனாளர்கள் மத்தியில் ஒரு சிறிய பயத்தை ஏற்படுத்தி இருக்கு அதாவது இந்த Application மூலம் அரசாங்கம் ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை சேமிக்க முடியும் என்றும் அதோட அவங்கள Surveillance வைக்க முடியும் என்றும் சொல்றாங்க.
ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய Productகளை அவர்களுடைய பயனாளர்களிடம் இது போன்ற அரசு மற்றும் தனியார் தொடர்பான Forceful Bloated Application Install பண்ணவிடமாட்டாங்க, அதனால அவங்க இந்த உத்தரவுக்கு எப்படி பதில் கொடுக்கிறாங்க என்று பார்ப்போம்.





