சமூக வலைத்தளமான X ( ட்விட்டர்) எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது, அந்த மாற்றங்களில் வரிசையில் இப்போது அவர்கள் சொன்னது போல் தனியாக Chat கொண்டு வந்து இருக்காங்க. அது தனியாக Application என்று நீங்கள் கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு என்னதான் அந்த மாற்றம் என்று பார்ப்போம்.
நாம X ( ட்விட்டர்) யாராவது ஒருவருக்கு Message பண்ணனும் நம்மளோட வார்த்தைகளை சொல்லணும் அப்டினா DM பண்ணனும் என்றால் அவங்களோட Profile போயிடு அதுல Mail Symbol இருக்கும் அதை கொண்டு அந்த Idக்கு நாம Message பண்ணலாம். இப்ப அதை தான் மாற்றி Chat என்று கொண்டு வராங்க X ( ட்விட்டர்) அதுல நாம ஆடியோ மற்றும் வீடியோ பேசிக்கலாம், file sharing பண்ணிக்கலாம் அதோட நாம அனுப்பிய Messages Editing கூட பண்ணிக்கலாம். அதோட மட்டுமில்லாமல் அந்த Conversation எல்லாமே End-to-End Encryption (E2EE) இருக்கும்.
இப்போதைக்கு இந்த Update ios பயனாளர்கள் மற்றும் Web பயனாளர்களுக்கு மட்டும் தான் கொடுத்து இருக்காங்க கூடிய விரைவில் எல்லாருக்கும் கிடைக்கப்பெறும்.





