நம்முடைய புகைப்படங்களை ஒரு சில வருடங்களுக்கு முன்னர் சேமித்து வைப்பதற்கு ஒரு Hard Disk அல்லது Pen Driveல சேமித்து வைப்போம், அதோட Storage முடிய முடிய புதிதாக வாங்கி அதில் சேமித்து வைப்போம். ஆனால் இப்போது எல்லாமே கிளவுட் Storage தான் நம்முடைய ஸ்மார்ட்போன்ல இருந்தே நேரடியாக தானாகவே Cloud உடன் Sync ஆகிரும். நமக்கு தேவைப்படும் ஒரு சில வருடங்களோ அல்லது பல வருடங்களோ கழித்து அதை பார்த்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால் Download கூட செய்து கொள்ளலாம்.

அப்படி ஒரு சேவையை தான் கூகிள் கொடுத்து வருது அதாவது நீங்க ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருந்தாலே பொது உங்களுக்கு 15 அளவு வரை நீங்கள் அதில் இலவசமாக அவர்களின் ஒரு சேவையான கூகிள் போட்டோஸ் நீங்க பயன்படுத்திக்கலாம் பெரும்பாலான மக்கள் அதை தான் பயன்படுத்திட்டு வராங்க. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லாமே AI மயம் தான் ஆனால் அந்த AI Train செய்ய நம்முடைய புகைப்படங்களை தான் பயன்படுத்துறாங்க என்று பல வருடமாக குற்றசாட்டு இருந்துட்டு வருது. ஆனால் கூகிள் அதையெல்லாம் மறுத்து இருக்காங்க அவங்க நம்முடைய புகைப்படங்களை பயனாளர் வசதிகா அதன் பிறகு நம்முடைய புகைப்படங்களை சுலபமாக அடையாளப்படுத்த சர்வர்ல Analyze பண்ணுவாங்க என்று சொல்றாங்க. ஆனால் அவங்க சொல்றது உண்மையானு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
இதையெல்லாம் பார்த்து கூகிள் நிறுவனத்துல வேலை பார்த்த ஒருத்தர் அதுவும் நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளாவை சேர்ந்த விஷ்ணு மோகன்தாஸ் என்ற ஒருவர் பிரைவசி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில அதுவும் End to End Encryption ஒட உருவாக்கின ஒரு Platform தான் Ente. இதன் மூலம் உங்களோட புகைப்படங்களை அவங்களோட Cloud நாம Upload பண்ணிக்கலாம் எல்லாமே E2E ஆக இருக்கும் அதனால அவங்கனால நம்முடைய புகைப்படங்களை பார்க்க முடியாது. அதோட சேர்த்து இது ஒரு ஓபன் சௌர்ஸ் Platform கூட. இதுல நீங்க உங்களுக்கு ஒரு Free Account Open பண்ணிட்டு அதுல உங்களுடைய Photos Upload செஞ்சுக்கோங்க. அவங்களோட Free Accountக்கு 10 GB Free Storage கொடுக்கிறாங்க. அதோட அவங்களிடம் மற்ற பிரீமியம் பிளான் எல்லாம் இருக்கு ரொம்ப கம்மியான விலைல உதாரணமா ஒரு வருடத்திற்கான கட்டணம் 120 டாலர் அதுல உங்களுக்கு 1 TB அளவுக்கு Storage கொடுக்கிறாங்க, அதிகமான Storage உங்களுக்கு தேவைப்பட்டால் அதை நீங்கள் பயன்படுத்திகொள்ளலாம்.
அதன் பிறகு Mobile மட்டும் Desktop Device எல்லாவற்றிலும் இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், நீங்கள் ஒரு Photographer அல்லது உங்கள் புகைப்படத்தை ஆன்லைனில் சேமிக்க வேண்டும் அதே நேரத்தில் அது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இவங்களோட Service பயன்படுத்திக்கோங்க.
இந்த Platform பற்றி பல முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த இதழ்களான WIRED , Tech Crunch, Android Authority , Itsfoss பதிவு செய்து இருக்காங்க. நீங்கழும் அவங்களோட Free Plan முயற்சி செய்து பாருங்க.





