நம்மளோட Devicela இருந்து ஒரு போட்டோ, வீடியோ அல்லது ஏதாவது ஒரு File எடுத்துக்கோங்க அதை Share பண்ணுவதற்கு நாம என்ன பண்ணுவோம் Smartphone ஆக இருந்துச்சு அப்படினா ஒரு Application வச்சு இருப்போம் Quick Share அது போல அதுல இருந்து இரண்டு Phoneக்கும் Share பண்ணுக்குவோம், அதே போல ஆப்பிள் போனஸ் இருந்துச்சு அப்டினா அவங்க Airdrop மூலமா Share பண்ணிப்பாங்க இது அவங்களோட Pcக்கும் பொருந்தும். இதுவே Cross-Compatibility ஒட ஒரு File Sharing Application Android டு Apple, Apple டு Windows, Windows டு Linux அப்டினு இருந்தா எப்படி இருக்கும், அதுவும் அந்த Application ஒரு Open Source Application இன்னும் எவ்ளோ நல்லா இருக்கும். அது போல ஒரு Application பற்றி தான் பார்க்க போறோம். நான் ரொம்ப build up கொடுக்குறேனு நினைக்காதிங்க நானும் இதை பயன்படுத்துவதற்கு முன்னர் அப்படி தான் நினைச்சுட்டு இருந்தேன், பயன்படுத்த ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது கொடுத்த Hypeக்கு Worthuனு.

Credits : Local Send
ஒரு சில பேருக்கு இல்லை நிறைய பேருக்கு இந்த Application பற்றி தெரிந்து இருக்கலாம் இருந்தாலும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கட்டுமேனு தான் இந்த பதிவு,
இந்த Application ஓட பெயர் LocalSend இதன் ஒரு Deviceல இருந்து மற்றொரு Deviceக்கு சுலபமாக Files Send பண்ணிக்க முடியும். உதாரணமாக நீங்க உங்களோட Mobile இருந்து உங்களோட Pcக்கு File Share பண்ணனும் அப்டினா உங்களோட Device ஒரு Wifiல Connect ஆகி இருந்தா மட்டும் போதும் சுலபமாக File Share பண்ணிக்கலாம் அதுவும் Internet ஏதும் தேவையில்லை ஒரு Phone Hotspotla Device Connect ஆகி இருந்தாலே போதும், File Share பண்ணிக்கலாம். Windows டு mac, mac டு android அப்டினு எல்லா வகையிலும் நல்லா இருக்கு.
இதுல நீங்க File Share பண்ணுவதற்கு Sign up எதுவும் பண்ண தேவையில்லை வெறும் அந்த Website அல்லது Application போயிடு நீங்க நேரடியா File Share பண்ணிக்கலாம் ஒரே Condition இரண்டு Deviceம் ஒரே Networkல இருக்கனும்.
நானும் இதை Try பண்ண வகையில இதுல நீங்க ஒரு 2 Gb வரையும் File Share பண்ணும்போதும் நல்ல Smooth ஆக இருக்குது, அதற்கு மேல நீங்க Large Files எல்லாம் போனீங்க அப்டினா கொஞ்சம் Slow ஆகுது. இது ஒரு Open Sourceல எல்லா Issue கொஞ்சம் கொஞ்சமா Fix பண்ணுறாங்க. நீங்களும் இதை முயற்சி செய்து எப்படி இருக்குனு சொல்லுங்க. நான் File Sharing இதை தான் பயன்படுத்திட்டு வரேன்.
Play Store Link
App Store Link





