உங்களுக்கு தொழில்நுட்பம் ஆர்வம் இருந்து அல்லது ஏதாவது தொழில்நுட்பம் சார்ந்து ஒரு சந்தேகம் இருந்து இன்னும் ஒரு வேலை நீங்க சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்திங்க அப்படின்னா அதுல எப்பயாவது உங்களோட Timelinela என்னோட பதிவுகளை நீங்க பார்த்து இருக்கலாம். அப்டி எதுவும் பார்கலேயே அப்டினு நீங்க சொன்னாலும் ஒகே தான், இப்ப இவ்ளோ தூரம் வந்துட்டீங்களா அது போதும், என்ன இந்த பதிவை படிக்கும் அதிகமான நபர்கள் ட்விட்டர்ல இருந்து Redirect ஆகி வந்து இருப்பாங்க அவங்களுக்கு ஓரளவுக்கு தெரிஞ்சு இருக்கும் யாராவது ஒரு புதிய பார்வையாளராக வந்து இருந்தாங்க அப்டினா அவங்களுக்கு ஒரு சிறிய அறிமுகம் கொடுக்கணும் அல்லவா அதற்குத்தான்.
என்னோட ட்விட்டர் முகவரி Mrbai007 இதுதான் ஒரு வேலை நீங்க இன்னும் என்னை பின்தொடரல அப்டினு சீக்ரம் ஒரு Follow கொடுத்துட்டு வந்து திரும்ப படிக்க ஆரம்பிங்க, முழுசா படிச்சிட்டு போறானே அப்டினு நீங்க சொல்றது கேக்குது. நான் ஒரு நான்கு வருடமாக தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை நான் படித்து அதை மற்றவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ட்விட்டர்ல எழுதிட்டுவரேன். அதோட அப்ப அப்ப சேர்த்து எங்காவது சுவாரசியமா வெளிய போனது எதாவது எனக்கு நடந்த நல்ல அனுபவங்கள் அப்பறம் எதாவது படித்த புத்தகங்கள் அதையும் எழுதிட்டு வரேன். இதன் மூலம் நிறைய Followers கிடைச்சாங்க அதன் பிறகு நிறைய நண்பர்களுக்கு கிடைச்சாங்க.
அதன் பிறகு கொஞ்சம் மாற்றமா Mediumla எழுதலாம்னு ஆரம்பம் செய்தேன். அதிலும் நிறைய பேர் பின் தொடர்ந்தாங்க. ஆனால் அதிகம் எழுதுனது ட்விட்டர்ல என்றுதான் சொல்லணும். அதன் பிறகு அங்க இருந்து Freelancer ஆரம்பம் செய்தோம் நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்து அதுவும் நன்றாகவே சென்று கொண்டு இருக்கிறது நிறைய Clients ட்விட்டர் மூலம் கிடைச்சாங்க, இன்னும் கிடைச்சுட்டு இருக்காங்க என்றுதான் சொல்லணும். இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தனியா ஒரு இணையதளம் ஆரம்பித்து அதில் எழுத துவங்கனும் என்று ரொம்ப நாள் ஆசை. நிறைய தடவ முயற்சி செய்து செய்ய முடியவில்லை சரி இந்த வருடம் ஆவது எப்படியாவது துவங்க வேண்டும் என்று நினைத்தேன் அதுவும் ஜனவரி மாதத்தில் ஆனால் இந்த வருடத்தின் இறுதியில் தான் துவங்க முடிந்தது. அந்த இணையத்தளத்தில் தான் நீங்கள் படித்து கொண்டு இருக்கிறீர்கள்.
ஒரு சில பக்கங்களை தவிர மற்ற பக்கங்களில் கொஞ்சம் வேலைகள் இருக்கிறது இதை நீங்கள் படித்து கொண்டு இருக்கும் போதே அறிந்து கொண்டு இருப்பிர்கள். எப்படியும் இன்னும் ஒரு சில வாரங்களில் முழுமை அடைந்துவிடும். அதேபோல இந்த இணையதளத்தை Monetize செய்யவும் ஒரு யோசனை இருக்கிறது அதற்கு இரண்டு வழிகளை யோசித்து வைத்து இருக்கிறேன் இந்த இணையதளத்திற்கு ஒரு நல்ல டிராபிக் கிடைத்த உடன் அது குறித்தும் ஒரு நிச்சயம் பதிவு வரும்.
அதே போல தொழில்நுட்பம் தொடர்பான மட்டுமில்லாமல் மற்ற துறைகளிலும் நிறைய பேர் தொடர்ந்து நல்ல நல்ல தகவல்கள் எழுதிட்டு வர்றாங்க உதாரணமாக புத்தகம் குறித்த பதிவுகள், இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான பதிவுகள், வேலைவாய்ப்புகள் தொடர்பான பதிவுகள் இவையாவும்.
இதெல்லாம் இருந்தாலும் இப்போதும் இதையெல்லாம் யார் தேடி போகி படிப்பார்கள் என்று நீங்க கேட்டீங்க அப்டினா, நல்ல எழுத்துகளை மக்கள் நிச்சயம் தேடி போகி படிக்கிறார்கள்.
Read – Write – Learn





